2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

உள ஆற்றுப்படுத்தல், சமூக விழிப்புணர்வு நிகழ்வு

Kogilavani   / 2013 நவம்பர் 13 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தினால் உள ஆற்றுப்படுத்தலும் சமூக விழிப்புணர்வும் என்னும் நிகழ்வு   செவ்வாய்க்கிழமை (12) செயலக மண்டத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கிளிநொச்சி ஹரித்தாஸ் -கியூடெக் நிறுவனம் அனுசரணை வழங்கியது.

இதில் பிரதேச செயலகப்பிரிவில் உள ஆற்றப்படுத்தல் பணிகளை மேற்கொள்ளல், சமூகமட்ட விழிப்புணர்வை மேற்கொள்ளல் போன்ற பணிகளில் எவ்வாறு கிராமமட்ட அமைப்புக்களையும் இணைக்கின்றமை தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் உளநல மருத்துவ அதிகாரி மா.ஜெயராஜா, கிளிநொச்சி மாவட்டச் செயலக உளவள அதிகாரி தே.துஷ்யந்தன், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின்  உளசமூகப் பணியாளர்  இ.ராஜேந்திரா மற்றும் கரைச்சி, கிளிநொச்சி மாவட்டங்களில் பணிபுரியும் வெளிக்கள உத்தியோகத்தர்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .