2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பொதுநலவாய மாநாட்டுக்கு செல்லமாட்டேன்: சி.வி.விக்னேஸ்வரன்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 13 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், நா.நவரத்தினராசா

'பொதுநலவாய மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் செல்லமாட்டேன்' என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வலி. வடக்கில் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும், வீடழிப்பினைத் தடுத்து நிறுத்தக் கோரியும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் பேராட்டத்தின் இரண்டாவது நாளில் (13) கலந்துகொள்ள வந்த முதலமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே எடுத்த முடிவுக்கு அமைவாக கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0

  • Man Wednesday, 13 November 2013 11:18 AM

    நீங்கள் புறக்கணிப்பு அரசியல் நடத்தியதால் இதுவரை சாதித்தது தமிழ் இனத்தின் தோல்விகள் மாத்திரமே. இதற்கு வரலாறு சான்று.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .