2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஏற்றுமதி உற்பத்தி துறையில் எமது நாடு கணிசமான முன்னேற்றம்: டக்ளஸ்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 13 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

ஏற்றுமதி உற்பத்தித்துறையில் எமது நாடு கணிசமான முன்னேற்றத்தைக் கண்டு வருவதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றுவரும் பொதுநலவாய வர்த்தக பேரவை மாநாட்டில் கலந்துகொண்டு 'உற்பத்தியும், பெறுமதி சேர்க்கையும்' என்னும் தலைப்பில் இன்று புதன்கிழமை (13) உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 'மூன்று தசாப்தங்களிற்கு மேலாக உள்நாட்டுப் போரினால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி முடங்கிப் போயிருந்தது. இருந்தும் ஏற்றுமதி உற்பத்தித் துறையில் எமது நாடு கணிசமான முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றது.

எமது அரசு உற்பத்தியையும், உற்பத்தியின் பெறுமதி சேர்க்கையையும் அதிகரிப்பதற்காக பல முனைகளிலும் முயற்சித்து வருகின்றது. உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்காகக் கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பல்வேறு விதமான வரிச்சலுகைகளையும் ஊக்குவிக்கும் பங்களிப்புக்களையும் செய்து வருகின்றது.

அத்துடன், பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு, பெருந்தெருக்கள், துறைமுகங்கள், தொழிற்;பேட்டைகள் போன்ற பாரிய உட்கட்டுமான பணிகளை கட்டியெழுப்புவதோடு மனித ஆற்றலை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் செயற்;படுத்தி வருகின்றது.

இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் முதல் விவசாய உற்பத்திப் பொருட்களே மொத்த ஏற்றுமதியில் முதன்மை வகித்துவந்த நிலைமை மாறி, இன்று கைத்தொழிற்துறையானது ஏற்றுமதி வருமானத்தில் விவசாயத்துறையை விட முன்னிலை வகிக்கின்றது.

2020ஆம் ஆண்டில் எமது நாட்டின் பொருட்கள் உற்பத்தித்துறை மொத்த உற்பத்தியின் 40 வீதத்தை அடைவதை இலக்காகக் கொண்டு அரசு உற்பத்தித் துறைக்கும்; உற்பத்தி தொடர்பான பெறுமதி சேர்க்கைக்கும் சகல ஊக்குவிப்புகளையும் வழங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .