2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

உண்ணாவிரதத்தில் பங்கேற்க சென்றவர்கள் பயணித்த பஸ் மீது கழிவு எண்ணெய் வீச்சு

Kanagaraj   / 2013 நவம்பர் 15 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே. பிரசாத்

வலி.வடக்கில் இடம்பெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு வடமராட்சியிலிருந்து பொதுமக்களுடன் சென்ற பஸ் மீது கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது.

யாழ். வல்லைப்பகுதியில் வைத்தே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால்  வலி.வடக்கில் மீள் குடியேற்றத்தினை வலியுறுத்தியும் அங்கு இடம்பெறும் வீடழிப்பினை நிறுத்தக் கோரியும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று நான்காம் நாளாக உண்ணா விரதப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இங்கு கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்ற மேற்படி பஸ்ஸின் மீதே கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினமும் மேற்படி உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள சென்ற பஸ்ஸின் மீது முட்கம்பிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .