2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வடமாகாணத்தில் நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனம்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 21 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வட மாகாணத்தில் எதிர்வரும் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரையில் நுளம்பு ஒழிப்பு வாரமாக வட மாகாண சுகாதார அமைச்சினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வடமாகாண சுகாதார அமைச்சினால் விடுக்கப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளது. இதனால் நீர்தேங்கி நிற்கும், இடங்களில் டெங்கு உயிர்கொல்லி மற்றும் ஏனைய நுளம்புகளின் பெருக்கம் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளதால் நிPர்தேங்கி நிற்கக் கூடிய வெற்றுச்சிரட்டைகள், பழைய ரயர்கள், வெற்றுப்பேணிகள் போன்றவற்றை அகற்றுவதுடன் வீட்டுசூழல், அலுவலகங்கள், பொது இடங்களை துப்பரவாக்கி நீர் தேங்குவதை தடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

சுகாதார திணைக்களம், உள்ளுராட்சி நிறுவனங்கள், உத்தியோகத்தர்கள், காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நீர் தேங்கி நிற்க்கக்கூடிய் இடங்களை துப்பரவாக்கி கொடிய நோய்களை பரப்பும் நுளம்புகளை அழிப்பதன்மூலம் நீங்களும் உங்கள் அயலவர்களையும் பாதுகாக்க முன்வருமாறும் அனைவரையும் கேட்டுக்கொள்வதாக அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .