2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

லங்கா சீமெந்து பணியாளர்களுக்கு கொடுப்பனவு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 27 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

லங்கா சீமெந்து கூட்டுத்தாபனத்தில் பணிபுரிந்த 57 பணியாளர்களுக்கு 3.1 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக வட மாகாண பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் இன்று (27) தெரிவித்தார்.

1990ஆம் ஆண்டிற்கு முன்னர் காங்கேசன்துறை லங்கா சீமெந்து கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றி யுத்தத்தினால் கடமையிலிருந்து விலகியவர்களுக்கு, முதல் கட்டமாக 60 வீதமான கொடுப்பனவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) வழங்கப்படவுள்ளதுடன், மிகுதி 40 வீதமான கொடுப்பனவுகள் 2014ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ளன.

மேற்படி கூட்டுத்தாபனத்தில் கடமையாற்றி விலகிய 57 பணியாளர்களையும் தேசிய அடையாள அட்டை, ரூபா 25 முத்திரை ஆகியவற்றுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) வடமாகாண பிரதி தொழில் ஆணையாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து, பணிக்கொடைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .