2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மரக்குற்றிகளை கொண்டு சென்றவர் கைது

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் ஒருவரை அச்சுவேலிப் பொலிஸார்  நேற்றுமுன்தினம்  வெள்ளிக்கிழமை  இரவு கைதுசெய்துள்ளனர்.

பருத்தித்துறையிலிருந்து யாழ். நோக்கி மரக்குற்றிகளுடன் சென்றுகொண்டிருந்த மேற்படி உழவு இயந்திரத்தில் இலக்கத்தகடு இல்லாததினால்,
வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் உழவு இயந்திரத்தை மறித்துச் சோதனையிட்டனர்.

இதன்போது, அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில்  மரக்குற்றிகள் கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில்  மேற்படி உழவு இயந்திரத்தில் இருந்த இருவர் தப்பியோடிய அதேவேளை, பொலிஸார் சாரதியைக் கைதுசெய்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X