2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தோசை, றொட்டி, கொத்துறொட்டி தயாரிக்கு இயந்திரம் கண்டுபிடித்த யாழ்.மாணவன்

Kogilavani   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்


தோசை, றொட்டி, கொத்துறொட்டி ஆகியவற்றினைத் தயார் செய்வதற்கான இயந்திரம் ஒன்றினை யாழ்.மானிப்பாய் இந்து கல்லூரி மாணவன் ஜெயச்சந்திரன் திருசன் கண்டுபிடித்துள்ளார்.

களனிப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட புத்தாக்குநர் போட்டியில் பங்குபற்றுவதற்காகவே இம்மாணவன் மேற்படி இயந்திரத்தினைக் கண்டுபிடித்துள்ளான்.

இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட இப்போட்டியில் மேற்படி மாணவனுக்கு சிறப்பு பரிசில் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் கடந்த காலங்களில் மாணவர்களுக்கிடையில் புத்தாக்கும் போட்டிகள் பல நடைபெற்று வந்தன.

இதனால் பல மாணவர்கள் தங்கள் எண்ணம் போல் பல புதிய,புதிய இயந்திரங்களையும் புதிய ஆக்கங்களையும் உருவாக்கினர்.

இருந்தும் தற்போது இவ்வாறான போட்டிகள் யாழ்.மாவட்டத்தில் நடைபெறுவது குறைவாகக் காணப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X