2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மதிலை பதம்பார்த்த கார்

Super User   / 2014 ஜனவரி 07 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


யாழிலிருந்து காங்கேசன்துறை வீதி வழியாக இன்று சென்றுகொண்டிருந்த காரொன்று  தெல்லிப்பழை காசிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலுள்ள வளைவில்  வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதியோரத்திலிருந்த 15 அடி நீளமான மதிலை இடித்து வீழ்த்தியுள்ளது என தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தினால் எவருக்கும் எவ்விதமான ஆபத்துகளும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.வேகக் கட்டுப்பாட்டினை இழந்து காரின் முன்பக்கம் மதிலில் மோதியதால் மதிலின் ஒருபகுதிய இடித்து வீழ்ந்துள்ளது.

கார்  தொடர்ந்தும் சுழன்றமையினால் காரின் பின்பக்கமும் மதிலில் மோதி மிகுதி மதிலையும் இடித்து வீழ்த்தியுள்ளது என பொலிஸ் மேலும் தெரிவித்தனர்.



  Comments - 0

  • Sumathy M Friday, 10 January 2014 05:12 PM

    தமிழ் மக்களை அழிக்க அரசாங்கத்தின் சதியோ ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .