2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கூட்டமைப்பு எதிராக ஒரு கூட்டணி?

Kanagaraj   / 2014 ஜனவரி 11 , பி.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக பலமான கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் தமிழ்க்கட்சிகள் சிலவற்றுக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

இந்த கலந்துரையாடலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர் என்றும் அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல்  யாழ். நல்லூரில் அமைந்துள்ள ஈரோவில் மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் 4 மணியிலிருந்து இடம்பெற்றுள்ளது. 

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணியின் சுகு சிறிதரன், சிறிரெலோ அமைப்பினைச் சேர்ந்த உதயராசா, வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட தமிழழகன், மாநாகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் அங்கத்தவர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் எதிர்காலத்தில் மேற்கூறப்பட்ட அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒரு கூட்டணியாகச் செயற்படுவதென தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், இந்தக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விடயங்களை சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .