2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வயோதிபரை மோதிய வான் சாரதி பொலிஸில் சரணடைந்தார்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 05 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

நெல்லியடி தனியார் வங்கிக்கு முன்னால் வீதியினைக் கடக்க முற்பட்ட வயோதிபரை மோதிய வான் சாரதி பொலிஸில் சரணடைந்தார் என்று நெல்லியடிப் பொலிஸார் இன்று (05) தெரிவித்தனர்.

நெல்லியடி, வதிரியைச் சேர்ந்த பொன்னம்பலம் தங்கராசா ராசாகோபன் (65) என்ற வயோதிபர் வீதியைக் கடக்க முற்பட்ட போது நெல்லியடியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த வானொன்று மோதியதில் அவர் ஸ்தலத்திலே பலியாகியிருந்தார்.

இதனையடுத்து குறித்த வான் சாரதி வானினை அவ்விடத்திலேயே விட்டு தப்பியோடியிருந்தார். இந்நிலையில் கதிரத்தோட்டம் கொற்றாவத்தையினைச் சேர்ந்த வானின் சாரதி, இன்று  நண்பகல், நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் வந்து சரணடைந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .