2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஆட்டோ தடம்புரண்டதில் குடும்பஸ்தர் காயம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 07 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். உடுவில், ஆலடிப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டியொன்று தடம்புரண்டதில் உடுவில் தெற்கு சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த கமலநாதன் கஜேந்திரா (வயது 32) என்ற குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தனது நண்பரிடம் முச்சக்கரவண்டியை பெற்றுக்கொண்டு கடைக்கு வெள்ளிக்கிழமை (07) காலை  சென்றுகொண்டிருந்தபோது, விபத்திற்குள்ளானதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .