2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மதில் விழுந்ததில் இராணுவ வீரர் மரணம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 11 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். பலாலி படைத் தலைமையகத்தின் இராணுவ முகாமிலுள்ள மதில் செவ்வாய்க்கிழமை (11) காலை திடீரென்று உடைந்து விழுந்ததில் படுகாயமடைந்த இராணுவ வீரர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டி, வலப்பனை பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஜே.எம்.எஸ்.பண்டார (வயது 23) என்பவரே  மரணமடைந்துள்ளார். 

அங்கு இவர் வேலை செய்துகொண்டிருந்தபோதே மதில் உடைந்து விழுந்தது.

இந்த நிலையில், இவரது சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .