2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இருவேறு விபத்துக்களில் ஒருவர் மரணம்; இருவர் காயம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை (12) இரு வேறிடங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஒருவர் மரணமடைந்ததுடன், இருவர் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றவரை போக்குவரத்து பொலிஸார் மறித்தபோது, மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதால் அவரை பொலிஸார் துரத்திச் சென்றனர். இதன்போது, மோட்டார் சைக்கிள் யாழ். ஆனைப்பந்திச் சந்தியில் முச்சக்கரவண்டியுடன் மோதிச் சென்று மின்கம்பத்துடன் மோதியதால் கோப்பாயைச்; சேர்ந்த எ.சுதாகரன் (வயது 36) என்பவர்  படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இவர் மரணமடைந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை, மீசாலையில்  மோட்டார் சைக்கிளும் உழவு இயந்திரமும் விபத்திற்குள்ளானதில் மோட்டர் சைக்கிளில் பயணித்த  மீசாலையைச் சேர்ந்த முருகேசு கணேஸ்குமார் (வயது 33), கொடிகாமத்தைச்; சேர்ந்த ஆர்.அருந்தவராஜா (வயது 33) ஆகிய இருவரும் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .