2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

தேசிய மீனவர் சங்கத்தின் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பம்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 15 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா,நா.நவரட்ணராசா

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட போராட்டம் இன்று (15) காலை முதல் யாழ்.முனியப்பர் ஆலயத்திற்கு முன்னால் ஆரம்பமாகியுள்ளது.

'காணாமற்போனவர்கள் தொடர்பாக பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், நில அபகரிப்பை தடுத்து நிறுத்துதல், மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்தப் போராட்டம் ஒழுஞ்கு செய்யப்பட்டது.

'எமது நிலம் எமக்கு வேண்டும்', 'மானியம் வழங்கி விலை வாசியினை ஏற்றாதே', 'வலி.வடக்கில் மீள்குடியேற்று', 'எங்கள் சொந்த நிலங்களுக்குச் செல்லவிடு', 'காணிகள் சவீகரிக்கப்படுவதினை உடனடியாக நிறுத்து', 'அரசியற் கைதிகளை விடுதலை செய்', 'எங்கள் பிரதேசங்களில் மீளக்குடியமர்த்து' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய சுலோகங்களைத் தாங்கியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் தேசிய மீனவர்கள் ஒத்துழைப்பு இயக்கத்தின் அங்கத்தவர்கள், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .