2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தலைவரின்றி இறுதி நாள் சாட்சியங்கள் பதிவு

Super User   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

காணமற் போனவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு, யாழில் இன்று மேற்கொள்ளும்  இறுதி நாள் சாட்சியங்கள் , ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணஹம இல்லாமல் பதிவுசெய்யப்படுகின்றன.

இந்த ஆணைக்குழுவின் சாட்சியங்களை பதிவு செய்யும் செயற்பாடு கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை யாழ். மாவட்டத்தின் பல இடங்களில் இடம்பெற்றன.

இறுதி நாள் சாட்சியங்கள் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்று வருகின்றது. இன்றைய அமர்வை தவிர யாழில் நடந்த சகல அமர்வுகளிலும் ஆணைக்குழுவின் தலைவர்  கலந்துகொண்டார்.

எனினும்  இறுதி நாளான இன்றைய  அமர்வில் அவர் பங்கேற்கவில்லை. சுகயீனம் காரணமாக அவர் கலந்துகொள்ளவில்லை என மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X