2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

மத்திய அரசிற்கும் வடமாகாண சபைக்கும் பாலமாக இருப்போம்: அங்கஜன்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 20 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

வடமாகாண சபையின் எதிர்க்கட்சி என்ற வகையில் மக்களின் நலன்களைப் பேணுவதற்காக மத்திய அரசிற்கு வடமாகாண அரசிற்கும் பாலமாகச் செயற்படுவோம் என வடமாகாண எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய அரசியல் விவகாரங்களுக்கான அதிகாரி மேரி ஜமஸிதாவுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேரி ஜமஸிதாவுக்கும் வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (19) வடமாகாண சபை தவிசாளரின் அலுவலகத்தில் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் முன்னிலையில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவித்த அங்கஜன், 'வடமாகாண சபையினால் மக்களுக்காக முன்னெடுக்கக்கூடிய நலத்திட்டங்கள் தொடர்பில் ஆதரவு தெரிவிப்பதற்கு எப்போதும் எதிர்க்கட்சி பக்கபலமாக இருக்கின்றது. அத்துடன், வடமாகாண சபை ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் திடமான உறவு காணப்படுகின்றது' என்றும் குறிப்பிட்டார். 

'வடமாகாண சபையின் செயற்பாடுகள் குறித்த நான் மேரியிக்கு எடுத்துக்கூறினேன். அத்துடன் அடுத்து எவ்வாறான நடைமுறைக்குத் தேவையான திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்பது தொடர்பில் தெரிவித்திருந்தேன். அத்துடன் மக்களுக்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் மக்களுக்குச் சென்றடைய வேண்டும். அவ்வாறு இல்லாத தீர்மானங்களை நாங்கள் எதிர்ப்போம் எனவும் அவரிடம் கூறினேன்' என்றார்.

'மக்களின் தற்போது இருக்கும் தேவைகளே அவசியமானதொன்று. அதனையே வடமாகாண சபையினால் முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்தேன். அதற்கு பதிலளித்த தவிசாளர், 'ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து மக்களின் நலன்கள், தேவைகள் தொடர்பில் செயற்பட வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த  மேரி ஜமஸிதா, 'வடமாகாண சபையின் செயற்பாடுகள் பற்றி அறிய தொடர்ந்தும் ஆவலாகயிருப்பதோடு அதன் நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும்' தெரிவித்தார் என்று அங்கஜன் ராமநாதன் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .