2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இரண்டு நாட்களுக்குள் உருளைக்கிழங்கு உற்பத்தி

Kogilavani   / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


சதோச நிறுவனத்தின் தலைவருடன் தொடர்பு கொண்டு இரண்டு நாட்களுக்குள் 400 மெற்றிக்தொன் உருளைக்கிழங்கை கொள்வனவு செய்தவற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உள்நாட்டு வர்த்தகப் பிரதி அமைச்சர் ஹேமல் குணசேக உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களிடம் வியாழக்கிழழைம (20) உறுதியளித்தார்.

யாழ். மாவட்டத்தில் உருளைக்கிழக்கு உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சனைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் வடமாகாண சபை உறுப்பினரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ்.கிறீன் கிறாஸ் ஹோட்டலில் நேற்று வியாழக்கிழமை (20) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உள்நாட்டு வர்த்தகப் பிரதி அமைச்சர் ஹேமல் குணசேகர  கலந்துகொண்டார்.

இதன்போது, இதுவரை 1500 மெற்றிக்தொன் உருளைக்கிழங்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 400 மெற்றிக்;தொன் மட்டும் இருப்பில் உள்ளது. இதனை சந்தைப்படுத்தவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஹேமல் குணசேகரவிடம் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண அரசுக்கும் அரசியல் ரீதியில் பல பிரச்சனைகள் இருந்தாலும் மக்களின் பிரச்சனை என்று வரும்போது நாங்கள் அந்த பேதங்களை மறந்து செயற்படுகின்றோம் என்று விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இங்கு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை பிரதி அமைச்சர் ஹேமல் குணசேகர மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதுவரை காலமும் உருளைக்கிழங்கை கொள்வனவுசெய்து வந்த சதோச நிறுவனம் தற்போது உருளைக்கிழங்கு கொள்வனவை நிறுத்தியுள்ளதால் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .