2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

போலி ஆவண விசாரணை விசேட குற்றத்தடுப்புப் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

Kogilavani   / 2014 மார்ச் 13 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

குற்றவியல் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரை பிணையில் விடுவிப்பதற்கு போலி ஆவணங்களை தயாரித்த உறவினர்களை கைதுசெய்வதற்கு, கிளிநொச்சி விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் கோரிய அனுமதியினை கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் இன்று (13) வழங்கினார்.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

குற்றவியல் சட்டத்தின் கீழ் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு கிளிநொச்சி நீதிமன்றத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபரை பிணையில் விடுவிப்பதற்காக கிராமசேவகர், கிளிநொச்சி உதவி அரசாங்க அதிபர் ஆகியோரின் போலியான
கையொப்பமிடப்பட்ட ஆவணத்தை கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு உறவினர்கள் சமர்ப்பித்துள்ளனர்.

குறித்த ஆவணம் போலி ஆவணம் என கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீனினால் கண்டறியப்பட்டதையடுத்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு கிளிநொச்சி பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

தொடர்ந்து கிளிநொச்சி பொலிஸார் இந்த போலி ஆவணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பினை விசேட குற்றத்தடுப்புப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், குறித்த விசாரணைகளை மேற்கொண்டு, போலி ஆவணங்கள் தயாரித்தவர்களைக் கைது செய்வதற்கு அனுமதி வழங்குமாறு விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் நீதிமன்றத்தினை வியாழக்கிழமை (13) கோரியிருந்தபோது, நீதவான் அதற்கான அனுமதியினை வழங்கியிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .