2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிப்பு

Super User   / 2014 மார்ச் 13 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ்.வணிகர் கழகம் மற்றும் யாழ்.மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டப் பாடசாலைகளிலிருந்து இடைவிலகிய 956 மாணவர்களை தொடர்ந்தும் பாடசாலையில் கல்விகற்க வைப்பதற்காக 15 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை உபரகணங்கள் வியாழக்கிழமை (13) வழங்கப்பட்டன.

இந்த பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மேற்படி உபகரணங்கள் வழங்குவதற்காக யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களிலிருந்து மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிகழ்வில் யாழ்.மாவடட மேலதிக மாவட்டச் செயலர் ரூபினி வரதலிங்கம், யாழ்.வணிகர் கழகத் தலைவர் ஆர்.ஜெயசேகரம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .