2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

துஷ்பிரயோகங்களுக்கு எதிராக பேரணி

Suganthini Ratnam   / 2014 மார்ச் 14 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான  துஷ்பிரயோகங்களுக்கு எதிரான  கண்டனப் பேரணி யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை (14) நடைபெற்றது.

வடமாகாணசபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் நெல்லியடிப் பகுதியில் ஆரம்பமான இப்பேரணி கரவெட்டி பிரதேச செயலகத்தைச் சென்றடைந்தது.

'சிறுவர்கள் எங்கள் தேசத்தின் விலை மதிப்பில்லாத சொத்து', 'எமது பொருளாதாரத்திற்கு அப்பால் கடன் பெறுவதை தவிர்ப்போம்', 'புகை எமது சமூகத்திற்கு பகை', 'சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை  ஒழிப்போம்' போன்ற கோஷங்களை இவர்கள் எழுப்பியவாறு பேரணியாகச் சென்றனர்.
இப்பேரணியின் முடிவில் கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தம்பிமுத்துவினால் 10 அம்சக் கோரிக்கை அடங்கிய  மகஜர், கரவெட்டி பிரதேச செயலர் எஸ்.சிவசிறி ஊடாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாணத்திலுள்ள 5 மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கும் அனுப்பி வைக்குமாறு கையளிக்கப்பட்டது.

இப்பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈஸ்வரபாதம் சரவணபவன், வடமாகாணசபை உறுப்பினர்களான பாலச்சந்திரன் கஜதீபன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வேலுப்பிள்ளை சிவயோகன், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞானப்பிரகாசம் கிண்ஷக்ர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .