2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பனை ஓலையால் காயமடைந்தவர் வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 19 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். ஏழாலை வடக்கு பகுதியில்  பனை மரத்திலிருந்து   பனை ஓலை  மகாதேவன் விஜிதரன் (வயது 20) என்பவர்; மீது வீழ்ந்ததால் படுகாயமடைந்த அவர்;  தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

செவ்வாய்க்கிழமை (18) பனை மரத்தில் பனை ஓலைகள் வெட்டப்படுவதை  கீழே நின்று பார்த்துக்கொண்டிருந்தபோதே இவரின் மீது பனை ஓலை வீழ்ந்தது. இதனால் இவரின்  தலை மற்றும் முகத்தில் கீறல்  காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .