2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மெத்தைகள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 19 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன்


யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பெண்கள் விடுதிக்கு 33,000 ரூபா பெறுமதியான 10 படுக்கை விரிப்புக்களுடன் கூடிய மெத்தைகள் புதன்கிழமை (19) வழங்கப்பட்டன.

மட்டுவில் தெற்கை சேர்ந்த அமரர்களான கந்தையா கிருஸ்ணர், சிவபாக்கியம் கந்தையா, கதிரன் நவசி, மட்டுவில் வடக்கு சந்திரபுரத்தைச் சேர்ந்த பொன்னையா ஆசைப்பிள்ளை ஆகியோரின் ஞாபகார்த்தமாக அவர்களது குடும்பத்தவர்களால் மெத்தைகள் வழங்கப்பட்டன.

மேற்படி படுக்கை விரிப்புக்களுடன்; கூடிய மெத்தைகளை  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினரிடம் குடும்பத்தினர் வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .