2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

டைனமேட் வெடிகளை பாவித்து பிடித்த மீன்களை அழிக்க உத்தரவு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 20 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். உடுத்துறை கடற்பரப்பில் டைனமேட் வெடிகளை பயன்படுத்தி பிடித்த மீன்களை அழிக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உ.விஜயராணி உத்தரவிட்டார்.

இது தொடர்பில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும்  நீரியல்வளத்துறை அதிகாரிகள்  புதன்கிழமை  (19) வழக்குத் தாக்கல் செய்தபோதே, பதில் நீதவான் இந்த  உத்தரவைப் பிறப்பித்தார்.

உடுத்துறை கடற்பரப்பில் செவ்வாய்க்கிழமை (18) டைனமேட் வெடிகளை பயன்படுத்தி அப்பகுதி மீனவர்கள்  மீன்பிடிப்பதை அறிந்த கடற்படையினர், அங்கு சென்றபோது, பிடித்த மீன்களை அவ்விடத்தில் போட்டுவிட்டு மீனவர்கள்  தப்பிச் சென்றனர்.

இது தொடர்பில் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்த  கடற்படையினர்,  கைப்பற்றிய  மீன்களையும்  மேற்படி அதிகாரிகளிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .