2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழில் மும்மொழிக்கற்கை நிலையம்.

Super User   / 2014 மார்ச் 21 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். கோப்பாய் ஜி.பி.எஸ் வீதியில் அமைந்துள்ள வடமாகாண இலவச மும்மொழிக்கற்கை நிலையம் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் இன்று (21) திறந்து வைக்கப்பட்டது.

தனியார் கட்டிடம் ஒன்றில் திறக்கப்பட்டுள்ள இந்த மும்மொழிக் கற்கையினை கற்பதற்கு யாழ்.மாவட்டத்திலிருந்து 1400 இற்கும் மேற்பட்டவர்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களை பிரிவுகளாகப் பிரித்து நேர அட்டவனை வழங்கப்பட்டு, வாரத்தின் அனைத்து நாட்களிலும் வகுப்புக்கள் நடத்தப்படவுள்ளதுடன், வகுப்புக்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த கற்கை நெறியானது வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் ஏற்பாட்டில் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்தது.

இந் நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், யாழ்.பிரதிப்பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ், நல்லை திருஞான சம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான தேசிக சம்பந்த பரமாசார்ய சுவாமிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .