2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

நுண்கலைப்பீட மாணவர்கள் ஐவர் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 24 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்

கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்ட நுண்கலைப்பீட மாணவர்கள் 05 பேரை சுன்னாகம் பொலிஸார் திங்கட்கிழமை  (24) கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 22ஆம் திகதி தங்கள் மீது இனந்தெரியாதோர்  மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து மருதனார்மடத்தில் அமைந்துள்ள  யாழ். பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீட மாணவர்கள் திங்கட்கிழமை (24) காலை கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 05  மாணவர்களைக் கைதுசெய்தனர்.

தாக்குல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 05 பேரையே கைதுசெய்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற பிரச்சினை காரணமாகவே 22ஆம் திகதி தாக்குதல் இடம்பெற்றதாகவும்; இது தொடர்பில்  விசாரணை மேற்கொண்ட நிலையில் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும்  மேற்படி ஐவரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இதனைத் தொடர்ந்து, வெளிநபர் ஒருவரையும் தற்போது கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினார்.

இவர்கள் 06 பேரையும்; மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .