2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

குழப்பம் விளைவித்த ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்

Kogilavani   / 2014 மார்ச் 28 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தினுள் முன் அனுமதி பெறாமல் அலுவலக  நேரத்தில் உள்நுழைந்து நிர்வாக செயற்பாடுகளுக்கு குழப்பம் விளைவித்த இரு ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களை கிளிநொச்சி பொலிஸார் அவ்விடத்திலிருந்து வெள்ளிக்கிழமை (28) வெளியேற்றியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி பொதுச் சந்தையில் கடந்த 26 ஆம் திகதி செய்தி சேகரிப்பதற்காக சென்ற பிராந்திய செய்தியாளர் ஒருவர் மீது கரைச்சி பிரதேச சபை பணியாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியதுடன் குறித்த செய்தியாளரின் புகைப்படக் கருவிகளையும் அடித்து நொருக்கியுள்ளார்.

இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட செய்தியாளரால் அன்றைய தினமே கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை  (28) குறித்த செய்தியாளரும் மேற்படி சம்பவத்தில் நின்றிருந்த மற்றொரு ஊடக நிறுவன செய்தியாளரும் கரைச்சி பிரதேச சபை வளாகத்தினுள் உள்நுழைந்து குறித்த பிரதேச சபை பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரைச்சி பிரதேச சபை செயலாளர் ந.கிருஷ்ணகுமார் கிளிநொச்சி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த செய்தியாளர்களை பிரதேச சபையிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.

தற்போது பிரதேசசபை வளாகத்தினை சுற்றி பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .