2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சாவகச்சேரி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் குழந்தைகளுக்கு பாலூட்ட இடவசதி

Suganthini Ratnam   / 2014 மார்ச் 31 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கி.பகவான்


யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக வரும் பாலூட்டும் தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்குரிய இடவசதி செய்யப்பட்டுள்ளதாக அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேள்ட்விஷன்; நிறுவனத்தின் நிதியுதவியில் அங்குள்ள சிறியதொரு இடத்தை ஒதுக்கி சுற்றிவர கண்ணாடியினால்  அறையொன்று  அமைக்கப்பட்டுள்ளது.  

சாவகச்சேரி வைத்தியசாலை விடுதிகளில் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு ஏற்கெனவே அறை அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெளிநோயாளர் பிரிவிலும் இந்த வசதி செய்து தரப்படவேண்டும் என பாலூட்டும் தாய்மார்கள்  வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதற்கமைய வெளிநோயாளர் பிரிவில் இவ்வாறன அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .