2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சபையை இயங்கவிடாது அரசு தடுக்கிறது : சி.வி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 04 , பி.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத், சொர்ணகுமார் சொரூபன், சுமித்தி தங்கராசா


இலங்கை அரசாங்கம், வடமாகாண சபையை இயங்கவிடாமல் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சரிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமை (04) விஜயம் செய்திருந்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகத்துடனான சந்திப்பினைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேற்படி சந்திப்பு வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.

முதலமைச்சர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

'சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் வடக்கு விஜயமானது இங்கு ஆங்கிலக் கல்வியினை விருத்தி செய்யும் நோக்கிலேயே அமைந்துள்ளது.

இதனால், ஆங்கிலக் கல்வியை நாங்கள் சிறிது காலம் கைவிட்டதால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து நான் அவரிடம் தெளிவுபடுத்தியுள்ளேன். 
அரசியல் பற்றி கதைப்பதை அவர் விரும்பவில்லை. இருந்தாலும் வடமாகாண சபையை நடத்த விடாமல்; தடுப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருவதுடன் பல தடைகளையும் ஏற்படுத்தி வருகின்றது என்று அவரிடம் தெரிவித்திருந்தேன் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .