2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழில் இரத்ததான முகாம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 07 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

அளவெட்டி கோணேஸ் மற்ஸ் அக்கடமியின் ஸ்தாபகரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் முன்னாள் செயலருமான நா.கோணேஸ்வரனின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு இரத்ததான முகாமொன்று இன்று(07) கோணேஸ் மற்ஸ் அக்கடமி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கோணேஸ் மற்ஸ் அக்கடமி சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்ததான முகாமில் 43 பேர் இரத்தானம் செய்தார்கள்.

அளவெட்டி வட்ட லியோ கழகம் மற்றும் மானிப்பாய் வட்ட லயன்ஸ் கழகம் ஆகியன இந்நிகழ்விற்கு அனுசரணை வழங்கியிருந்ததுடன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவினைச் சேர்ந்த வைத்தியர்கள், தாதியர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .