2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பாடல் மாற்றியமையினால் வாள்வெட்டு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன்
கரவெட்டி கரணவாய் தெற்கு முதலிற்குழி என்னும் இடத்தில் இருவருக்கு இடையில் இடம்பெற்ற முறுகல் இறுதியில் வாள்வெட்டில் முடிந்ததில் இந்திரன்  நிமல்ஸன்(வயது19) என்பவர் படுகாயமடைந்து செவ்வாய்க்கிழமை(15) இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி இடத்திலுள்ள விளையாட்டுக்கழகத்தில் திங்கட்கிழமை(14) இரவு புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், ஒலி பெருக்கியில் ஒலிக்க விடப்பட்ட பாடலினை மாற்றியது தொடர்பில் இருவருக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்போது, முறுகலில் ஈடுபட்ட நபர் வீட்டிற்குச் சென்று வாளினை எடுத்து வந்து மற்ற நபரினை வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த நிமல்ஸன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாளால் வெட்டிய நபர் தலைமறைவாகவுள்ளதாகவும் அவரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .