2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

புனரமைக்கப்பட்ட வீதி திறந்து வைப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 60 இலட்சம் ரூபா நிதியில் செப்பனிடப்பட்ட கொழும்புத்துறை மலைவேம்படி 5ஆம் குறுக்குத் தெரு மக்கள் பாவனைக்காக இன்று செவ்வாய்கிழமை(15) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த வீதி புனரமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி.குகேந்திரன், முன்னாள் யாழ் மாநகரசபை பிரதி மேயர் துரைராசா இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .