2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

குழந்தை சிகிச்சைப் பிரிவிற்கு இயந்திரம் அன்பளிப்பு

Super User   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் அதிதீவிரச் சிகிச்சைப் பிரிவுக்கு 3 மில்லியன் ரூபா பெறுமதியான சி.பி.ஏ.பி. (CPAP) இயந்திரம் கொழும்பு உள்ளக லயன்ஸ் கழகத்தினரால்  புதன்கிழமை (16) அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுத்திணறல் மற்றும் சளியில் இருந்து இந்த இயந்திரத்தின் மூலம் பாதுகாக்க முடியும்.

இந்தக் கழகம் 30 வருட கால தொடர்பினை யாழ். போதனா வைத்தியசாலையுடன் பேணி வருகின்றது. 25 வருடத்திற்கு முன்பு கண் சத்திரசிகிச்சைப் பிரிவையும் அம்புலன்ஸ் ஒன்றையும் வழங்கியிருந்தது.

யுத்த காலத்தின் போது 12 மில்லியன் ரூபா செலவில் அவசர சிகிச்சைப் பிரிவும் கட்டிக் கொடுக்கப்பட்டதுடன் குழந்தைகள் பிரிவுக்கு 4 வென்சிலேட்டர்களும் வழங்கியிருந்தது.

இந்;நிகழ்வில் லயன்ஸ் கழக மாவட்ட ஆளுனர் லயன்ஸ் ரஞ்சித் பர்னான்டோம அவரது பாரியார் டில்கானி, லயன்ஸ் கழக முன்னாள் ஆளுநர் லயன்ஸ் ராகவன், யாழ். போதனா வைத்தியசாலை உதவிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .