2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

தொழில் சட்டத்தினை உடனடியாக அமுல்படுத்த உத்தரவு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 25 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்களில் தொழில் சட்டத்தினை உடனடியாக அமுல்படுத்துமாறு வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் இன்று(25) உத்தரவிட்டுள்ளார்.
 
தொழில் நிறுவனங்களின் கூட்டுறவு மற்றும் சமூக கட்டுப்பாடு தொடர்பான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (25) யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
 
தொழில் நிறுவனங்களில் ஊழியர் சேமலாப நிதி கடைக்காரியாலய சட்டம் மற்றும் பணிக்கொடை சட்டம், சம்பள சபைச் சட்டம் போன்றவற்றினை இன்று வெள்ளிக்கிழமை(25) முதல் அமுல்படுத்துமாறும் வடமாகாண பிரதித் தொழில் ஆணையாளர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

தொழில் நிறுவனங்களின் அமைதி மற்றும் சமதொழில் பேணுதல் என்பது பற்றியும் இதன்போது தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
 
இக்கலந்துரையாடலில், யாழ். மாவட்ட தொழில் ஆணையாளர் நீலலோஜினி கேதீஸ்வரன், தொழில் திணைக்கள அலுவலர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .