2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மதுவரி அலுவலரைத் தாக்க முயற்சித்தவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2014 மே 01 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.பகவான்

சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் சாவகச்சேரி மதுவரித் திணைக்கள அலுவலரினை தாக்க முற்பட்ட நபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் புதன்கிழமை (30) உத்தரவிட்டார்.
இதேவேளை, வழக்கு விசாரணையினை 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

சாவகச்சேரி கெருடாவில் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக கசிப்பு வைத்திருந்ததாக சாவகச்சேரி மதுவரி நிலையத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு புதன்கிழமை (30) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. தன்போது குறித்த நபருக்கு அபராதம் விதித்து நீதவான் தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் அடுத்த வழக்கினை எதிர்பார்த்து நீதவான்; காத்திருந்தபோது மதுவரித் திணைக்கள அலுவலரை, கசிப்பு வைத்திருந்த நபரின் உறவினர் தாக்க முற்பட்டதுடன் கொலை எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இதனை நேரடியாக அவதானித்த நீதவான் குறித்த நபரைக் கைதுசெய்து வழக்கும் பதிவு செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
 'நீதிமன்றினை அவமதித்தமை', 'அரச அலுவலரை கடமை செய்யவிடாமல் தடுத்தமை', 'அரச அலுவலருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை' போன்ற குற்றங்கள் மேற்படி நபர் மீது சாட்டப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .