2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழ்.மாநகர சபையில் தீயணைப்புப் பிரிவிற்கு புதிய கட்டிடம்

Menaka Mookandi   / 2014 மே 02 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவிற்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்தார். மாநகரசபை வளாகத்தில் மேற்படி கட்டிடத்திற்கான அடிக்கல் வியாழக்கிழமை (01) நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகரசபை தீயணைப்புப் பிரிவிற்கென புதிய கட்டிடத்திற்காக நிதியுதவியினை உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சிடம் கோரியிருந்ததது.

இந்நிலையில், இரண்டு மாடிகளைக் கொண்டதாக 6.7 மில்லியன் ரூபா செலவில் அமையப்பெறவுள்ள இப்புதிய கட்டிடத்திற்காக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சு 5 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ள நிலையில் யாழ்.மாநகர சபை 1.7 மில்லியன் ரூபா ஊழியர் கொடுப்பனவாக வழங்கிவுள்ளது.

யாழ்.மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவிற்கென ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடத்திலுள்ள இடப்பற்றாக்குறையினை அடுத்து வளாகத்தில் சகல வசதி, வாய்ப்புக்களை கொண்டதாக நவீன முறையில் புதிய கட்டிடம் அமையப் பெறவுள்ளது.

சிறப்புப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அடிக்கல்லை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்தார். இதன்போது மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்களும் உடனிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .