2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

முக்கொலை : இரண்டாவது சந்தேகநபர் கைது

Kogilavani   / 2014 மே 04 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்

யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த மூவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபர்  அச்சுவேலி  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த வாள்வெட்டுச் சம்பவத்தினை மேற்கொண்ட முதலாவது சந்தேகநபரான பொ.தனஞ்சயன் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியும் கண்டுபிடிக்கபட்ட பின்னரேயே தற்போது இரண்டாம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி கதரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (04) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நிக்குநானந்தன் அருள்நாயகி (50), யாசோதரன் மதுசா (27), நிக்குநானந்தன் சுபாங்கன் (19) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளதுடன், தனஞ்செயன் தர்மிகா (25), க.யசோதரன் (30) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த 3 வயதுக் குழந்தை மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிவில்லை.

மேற்படி கொலைகளினால் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தர்மிகாவின் கணவனான தனஞ்செயன் கொலைகளை மேற்கொண்டிருந்தார் என பொலிஸார் விசாரணைகளில் தெரியவந்ததினையடுத்தே, மேற்படி நபர் முதலாவது சந்தேக நபராக கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .