2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வடமாகாண முதலமைச்சருக்கு முதுகில் கட்டி

Suganthini Ratnam   / 2014 மே 05 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் முதுகில் சிறுகட்டி ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கான சிகிச்சை தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி சுகவீனம் காரணமாக சி.வி.விக்னேஸ்வரன்  யாழ். போதனா வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (04) அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இவர் தொடர்ந்து 03 நாட்களுக்கு வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறவேண்டியுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு இதய சிகிச்சைப் பிரிவில் வைத்தே இவருக்கு சிகிச்சை வழங்கப்படுவதாகவும் வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .