2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இனந்தெரியாத நபர்களின் தாக்குதலில் ஒருவர் படுகாயம்

Super User   / 2014 மே 09 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

சுன்னாகம் புன்னாலைக்கட்டுவன் வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நேற்று வியாழக்கிழமை (08) இரவு மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஊரெழு மேற்கைச் சேர்ந்த கார்த்திகேசு அழகராசா (44) என்பவரே படுகாயமடைந்தவராவார்.
மேற்படி வீதியின் வழியே குறித்த நபர் தனது மாட்டினை சென்றுகொண்டிருக்கும் போதே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், அவ்விடத்திற்கு பொதுமக்கள் வந்ததையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

இதனையடுத்து குறித்த நபரை அப்பகுதி மக்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .