2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 மே 11 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

யாழ். கைதடி – கோப்பாய் வீதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று வேகக் கட்டுப்பாட்டை  இழந்து  பனை வடலியுடன் மோதியதால்,  இணுவிலைச் சேர்ந்த கணேசபிள்ளை றமேஸ் (வயது 40) என்பவர் மரணமடைந்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரியில் வியாபார நிலையமொன்றை  நடத்திவருகின்ற  இவர், தனது வியாபார நிலையத்தை மூடிவிட்டு சனிக்கிழமை (10) இரவு  வீடு செல்கையிலே விபத்திற்குள்ளானதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .