2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கிராம அலுவலகர் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2014 மே 11 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

யாழ். கே.கே.எஸ். வீதி சிவலிங்கப் புளியடியில்  கொக்குவில் மேற்கு கிராம அலுவலகர் மீது மாநகரசபை ஊழியர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (11) தாக்குதல் மேற்கொண்டதாக  தாக்குதலுக்குள்ளான  கிராம அலுவலகர்; முறைப்பாடு செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

மாநகரசபையால் கால்வாய் அமைக்கும் பொருட்டு குறித்த கிராம அலுவலகரின் வீட்டிற்கு முன்பாக வாய்க்கால் வெட்டப்பட்டிருந்தது. இதனால், கிராம அலுவலகர் தனது காரை  வீட்டிலிருந்து வெளியில் எடுக்கமுடியாமலிருந்தது.

இந்த நிலையில்,  குறித்த வாய்க்கால் மீது தற்காலிகமாக  பாலம் போட்டுத் தருமாறு  கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்ட மாநகர அலுவலரிடம் கிராம அலுவலகர் கேட்டார்;.

இதற்கு அம்மாநகர அலுவலகர், தமக்கு கால்வாய் வெட்டுவதற்கு மட்டும் முதல்வர் பணித்திருப்பதாக  பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து  தற்காலிகமாக ஒரு மண்கட்டுப் போட்டு காரை  எடுக்க கிராம அலுவலகர்  முனைந்தார். அவ்வேளையில் அங்கு நின்ற மாநகரசபை  ஊழியர் ஒருவர் கிராம அலுவலர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக  முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .