2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் கைது

Menaka Mookandi   / 2014 மே 21 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

15 வயதுச் சிறுமியுடன் குடும்பம் நடத்திய 21 வயது இளைஞன் ஒருவரை கொடிகாமம் பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (20) மாலை கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

ஆவரங்கால் பகுதியினைச் சேர்ந்த குறித்த சிறுமி முச்சக்கரவண்டியில் ஆவரங்காலிலுள்ள பாடசாலைக்குச் சென்று வந்த நிலையில் குறித்த முச்சக்கரவண்டிச் சாரதியான இளைஞனுடன் காதல் வயப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (19) குறித்த சிறுமி தனது புத்தகப் பையினுள் உடைகளையும் எடுத்துக்கொண்டு குறித்த முச்சக்கரவண்டி சாரதியுடன் சென்றுள்ளார்.

இந்நிலையில் தமது மகளைக் காணவில்லையென சிறுமியின் பெற்றோர் திங்கட்கிழமை (19) மாலை அச்சுவேலிப் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் செவ்வாய கொடிகாமம் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து சிறுமியினை மீட்டதுடன், குறித்த இளைஞனைக் கைது செய்தனர்.

சிறுமியினை வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார் இளைஞனைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .