2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பாதுகாப்பாக புலம்பெயர்தல் தொடர்பான கருத்தரங்கு

Kogilavani   / 2014 மே 21 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வி.தபேந்திரன்


புலம்பெயர்தலுக்கான சர்வதேச நிறுவனத்தின் (ஐ.ஓ.எம்.) ஏற்பாட்டில் நாட்டிலிருந்து பாதுகாப்பாக எவ்வாறு புலம்பெயர்தல் என்பது தொடர்பிலான கருத்தரங்கு கரைச்சிப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்றது.

பிரதேச செயலர் பொ.நாகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆபத்தான முறையில் அவுஸ்திரேலியாவிற்குச் செல்வதினைத் தவிர்த்து, பாதுகாப்பான முறையில் எவ்வாறு நாட்டிலிருந்து புலம்பெயர்தல் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இக்கருத்தரங்கில் கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமஅலுவலர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .