2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

யாழ்.பல்கலையில் விரிவுரைகளை பகிஷ்கரிக்க நடவடிக்கை

Kogilavani   / 2014 மே 21 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரைகளை வியாழக்கிழமை (22) முதல் இரண்டு நாட்களுக்குப் பகிஷ்கரிக்கவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் புதன்கிழமை (21) தெரிவித்தது.

பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், மற்றும் பீடாதிபதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்காதது குறித்தும், பல்கலைக்கழகம் காரணமின்றி கடந்த 16 ஆம் திகதியிலிருந்து புதன்கிழமை (21) வரை மூடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவரினை அடிக்கடி விசாரணைக்காக பாதுகாப்புத் தரப்பினர் அழைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்தப் பணிபகிஷ்கரிப்பில்  ஈடுபடவுள்ளதாக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

பகிஷ்கரிப்பின் போது மாணவர்கள் எவரும் விரிவுரைகளுக்குச் சமூகமளிக்கமாட்டார்கள் எனவும், தொடர்ந்து எதிர்வரும் திங்கட்கிழமை (26) திகதியே மாணவர்கள் விரிவுரைகளுக்கு சமூகமளிப்பார்கள் எனவும் மாணவர் ஒன்றியத்தினர் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .