2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

வீட்டின் கதவுகளை உடைத்து கொள்ளை

Kanagaraj   / 2014 மே 21 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.நீர்வேலி சிறுப்பிட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றின் கதவுகளை உடைத்து அங்கிருந்த இரண்டரை இலட்ச ரூபா பெறுமதியான பொருட்கள் இன்று (21) திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரினால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்த 5 பவுண் நகை, 10 ஆயிரம் ரூபா பணம் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட இரண்டரை இலட்ச ரூபா பெறுமதியான பொருட்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

வீட்டிலிருந்தவர்கள் ஆலயம் ஒன்றிற்குச் சென்று திரும்புகையில் வீட்டின் பின்கதவு திறந்து இருப்பதினை அவதானித்ததினையடுத்தே வீட்டில் திருட்டுப் போனவிடயம் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .