2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி சிலாகைகள் கொண்டு சென்றவர் கைது

Kogilavani   / 2014 மே 26 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ். வட்டுக்கோட்டையிலிருந்து பண்டத்தரிப்பிற்கு அனுமதிப்பத்திரமின்றி பனை மரச் சிலாகைகளை உழவு இயந்திரத்தில் கொண்டு சென்றவரை பிரான்பற்று பகுதியில் வைத்து திங்கட்கிழமை (26) காலை கைதுசெய்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதிக் கடமையிலீடுபட்ட பொலிஸார் வீதியால் வந்த உழவு இயந்திரத்தினைச் சோதனை மேற்கொண்ட போதே இவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி மரச்சிலாகைகள் கொண்டு செல்லப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

உழவு இயந்திரமும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை பண்டத்தரிப்பு சூரிய வைரவர் ஆலயத்திற்கு அருகில் அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் விறகு ஏற்றிச் சென்றவர் இன்று திங்கட்கிழமை (26) காலை கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .