2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஆசிரியையைக் காணவில்லையென முறைப்பாடு

Kogilavani   / 2014 மே 27 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.வடமராட்சி மணற்காடு இந்து தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 30 வயதான திலகரத்தினம் மதிவதனி (30) என்ற ஆசிரியையை திங்கட்கிழமை(26) முதல் காணவில்லையென அவரது சகோதரனால் திங்கட்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை (27) தெரிவித்தனர்.

நேற்றுக் காலை தொண்டைமானாறு காட்டுப்புலம் பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்த பாடசாலைக்குச் சென்றவர் மாலை ஆகியும் வீடு திரும்பவில்லையென சகோதரன் தனது முறைப்பாட்டில் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X