2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கசிப்பு உற்பத்தி செய்த பெண்ணுக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2014 மே 27 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கி.பகவான்

யாழ். சாவகச்சேரி, கெருடாவில் பகுதியில் கசிப்பு தயாரித்த பெண்ணொருவருக்கு 50,000 ரூபா தண்டம் விதித்த சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம்,  06 மாதங்களினுள்  180 மணித்தியாலங்கள் வரை சமூக சேவையில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டார்.

தனது வீட்டுச் சமையலறையில் கசிப்பு தயாரித்த இப்பெண்ணை புதன்கிழமை (14) கைதுசெய்த சாவகச்சேரி பொலிஸார், இவரிடமிருந்து 10 லீற்றர் கசிப்பு, கோடா, கசிப்பு தயாரிப்பதற்கான உபகரணங்களையும் கைப்பற்றினர்.

அன்றையதினமே  நீதிமன்றத்தில் இப்பெண்ணை ஆஜர்படுத்தியபோது, இவரை 14 நாட்களுக்கு  விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்  உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு மீண்டும் செவ்வாய்க்கிழமை  (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது,  தனது குற்றத்தை இப்பெண் ஒத்துக்கொண்ட நிலையில்,  நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .