2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆஸி உயர்ஸ்தானிகர் - வட மாகாண முதல்வர் சந்திப்பு

Menaka Mookandi   / 2014 மே 28 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்


இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்  றொபின் மூடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வாசஸ்தலத்தில் இன்று புதன்கிழமை (28) சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இவர், முதலில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்ததைத் தொடர்ந்து முதலமைச்சரைச் சந்தித்தார்.

தொடர்ந்து அவுஸ்திரேலியா நாட்டின் நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.

இதேவேளை, இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த உகண்டா நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷாம் குதேசா, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்றிருந்ததுடன் தொடர்ந்து யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் யாழ். பொதுநூலகம் ஆகியவற்றினைப் பார்வையிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .