2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கோயில் உடைப்பு : குத்துவிளக்குகள் கொள்ளை

Kanagaraj   / 2014 மே 28 , பி.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ். புத்தூர் பேரம்பிள்ளையார் ஆலயத்தின் கதவுகளை உடைக்கப்பட்டு, அங்கிருந்த 3 பெரிய பித்தளை குத்துவிளக்குகள் நேற்று செவ்வாய்க்கிழமை (27) இரவு திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆலயத்தின் அருகிலுள்ள அரசமரத்தின் வழியாக ஏறி ஆலயக் கூரையினைப் பிரித்து உள் இறங்கிய திருடர்கள் ஆலயத்தின் உள்ளே இருந்த கதவுகள் அனைத்தினையும் உடைத்ததுடன் குத்துவிளக்குகளைத் திருடிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .